வயநாட்டில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி பிடிக்கப்பட்டது|

பந்தலூர்:கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் மானந்தவாடி அருகே புதுச்சேரி என்ற இடத்தில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தாமஸ் என்பவரின் வீட்டு வாசலுக்கு வந்த புலி ஒன்று, தாமஸ் 50 என்பவரை தாக்கியது. காயமடைந்த அவர் கோழிக்கோடு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து புலியை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, அரசியல் கட்சியினர் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் புலியை பிடிக்கும் வரை இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட வனக்குழுவினர், கால்ந

டை மருத்துவ குழுவினர் புலியை மயக்க ஊசி செலுத்தும் பணியில் கடந்த இரண்டுl. நாட்களாக ஈடுபட்டனர்.

இன்று மாலை படிஞ்சாரத்துறை அருகே, குப்பாடித்தரா என்ற இடத்தில் மறைந்திருந்த புலிக்கு, கால்நடை டாக்டர் அருண் சக்கரியா தலைமையிலான குழுவினர், 5 முறை மயக்க ஊசி செலுத்தினார்கள். அதில் புலி தப்பிய நிலையில், ஆறாவது முறையாக புலியின் காலில் ஊசியால் சுட்டு அதில் மயக்கம் அடைந்த 10 வயது ஆண் புலியை, சுல்தான் பத்தேரி அருகே குப்பாடி வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்படட்டது. மானந்தவாடி பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த புலியை பிடித்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.