எப்போதும், எப்போதும் அஜித் ரசிகர் – 'துணிவு' வில்லன் ஜான் கொக்கேன்

சினிமாவில் நடிகராக இருந்து கொண்டு இன்னொரு ஹீரோவின் ரசிகர் என யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் சொல்ல மாட்டார்கள். ஆனால், ஒரு சிலர் நான் இந்த ஹீரோவின் ரசிகன் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் சொல்வார்கள். அப்படிப்பட்டவர்களில் 'நான் அஜித்தின் ரசிகன்' என வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் 'துணிவு' பட வில்லன் ஜான் கொக்கேன்.

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த 'சார்பட்டா பரம்பரை' படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஜான் கொக்கேன். ஆனால், அவர் இதற்கு முன்பே அஜித் நடித்த 'வீரம்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் ரயில் நிலைய சண்டைக் காட்சி ஒன்றில் அஜித் மீது கோடாரியைத் தூக்கி எறிபவர் ஜான் தான். அந்த 'வீரம்' படத்தின் புகைப்படத்தையும், இப்போது 'துணிவு' படத்தின் புகைப்படத்தையும் சேர்த்துப் பகிர்ந்து ஜான் கொக்கேன், “கனவு நனவானது… எப்போதும், எப்போதும் பெருமை மிகு அஜித் ரசிகன்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், நாளை மதுரைக்குச் சென்று பொங்கலைக் கொண்டாட உள்ளதாகவும், தனது முதல் மதுரைப் பயணம், மதுரை உணவை சுவைக்க ஆவலாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.