
ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் 15-வது உலகக் கோப்பை ஹாக்கி திருவிழா நடைபெற்று வருகிறது. வரும் 29-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், ‘சி’ பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, ‘டி’ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், இன்று (ஜன. 14-ம் தேதி) நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து – மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால், ஆட்ட நேர முடிவில் 4 – 0 என மலேசியா அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது.