புதுடில்லி: தனது வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தியதாக டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.
புதுடில்லி மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில், மதுபான கொள்கை மாற்றப்பட்டது. இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் நடந்த ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக மணிஷ் சிசோடியா வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.
இந்நிலையில் மணிஷ் சிசோடியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று சிபிஐ மீண்டும் எனது அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளது. அவர்களை நான் வரவேற்கிறேன். எனது வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.
எனது லாக்கரிலும் சோதனை நடத்தியதுடன், எனது கிராமத்திலும் விசாரணை செய்தனர். எனக்கு எதிராக எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்கவும் முடியாது. இதற்கு முக்கிய காரணம் நான் எந்த தவறும் செய்யவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement