
அடுத்த மாதம் ரிலீசாகிறது ஜெயம் ரவியின் ‛அகிலன்'
பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில், ஜெயம் ரவி மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் அகிலன். இதன் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவடைந்துவிட்டது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
கிறிஸ்துமஸ் விடுமுறையின் போதே படம் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 17 அல்லது 24ம் தேதி வெளியாகலாம் என்று தெரிகிறது.
இந்த படத்தில் ஜெயம்ரவி கடல்கொள்ளை கேங்ஸ்டராக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவர்கள் தவிர தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சாம்.சி.எஸ்.இசை அமைக்கிறார்.
பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியின் அடுத்த படமாக இந்த படம் வெளிவருகிறது.