
‛52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' – பார்த்திபனின் அடுத்த படம்
தமிழில் வித்தியாசமான படங்களை இயக்குபவர் பார்த்திபன். கடந்தாண்டு இவர் இயக்கிய முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமான ‛இரவின் நிழல்' வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அடுத்து ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்த பட தலைப்பை கண்டுபிடித்தால் புடவை பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் '52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என தனது புதிய படத்திற்கு தலைப்பு வைத்துள்ளார். பார்த்திபன் வெளியிட்ட பதிவு : ‛‛இன்பம் பொங்கட்டும்! உங்களின் நல்லாசியுடன் இவ்வாண்டின் முதல் படத்தின் தலைப்பை அடுத்து வெளியிடப்போகிறேன்.இந்நிமிடம் வரை அத்தலைப்பை சரியாக கணித்தவர்கள் அப்பதிவை அத்தாட்சியுடன் வெளியிட்டால் புடவை வாழ்த்து!மற்றபடி இப்போட்டியில் கலந்துக் கொண்டவர்களுக்கு மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்!'' என தெரிவித்துள்ளார். இந்த படமும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிறது.
மேலும், ‛‛இவ்வாண்டில் இன்னொரு படம் துவங்குகிறேன். அத்தலைப்பு ஒரு பெண்ணின் பெயர் கொண்டதாய் இருக்கும். அதனுள் ஒரு ஆண் பெயர் இருக்கும். கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு doll பரிசு'' என அறிவித்துள்ளார் பார்த்திபன்.