திருவெறும்பூர்: திருச்சி ஈவெரா சாலை கஸ்தூரிபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் அர்ஜுன்(20). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் திருச்சி தென்னூரை சேர்ந்த ஷிமர் அகமத் (20). திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோ சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று அதிகாலை மதுரையில் இருந்து திருச்சிக்கு இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். திருச்சி மணிகண்டம் எரக்குடி பிரிவு சாலை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனில் மோதி, அதே வேகத்தில் எதிர் சாலையில் சென்னையில் இருந்து நெல்லை சென்ற சுற்றுலா பஸ் மீது மோதியது. இதில் நண்பர்கள் இருவரும் உடல் நசுங்கி பலியாகினர்.