வெற்றி என்பது நிம்மதியான துாக்கம் : அடடா அசோக் செல்வன்

தமிழ் சினிமாவின் கதைக்களத்தை மாற்றிய 'சூது கவ்வும்', 'தெகிடி', 'பீட்சா 2', படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். சில நேரங்களில் சில மனிதர்கள், ஆரஞ்சு மிட்டாய், ஹாஸ்டல், 'ஓ மை கடவுளே' படங்கள் இளைஞர்களின் பேவரைட்டாக இன்று வரை உள்ளது. தற்போது வெளியான 'நித்தம் ஒரு வானம்' ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இவருடன் ஒரு பேட்டி.

அசோக் செல்வன் சினிமாவுக்கு வந்தது எப்படி
எந்த சினிமா பின்னணியும், ஐடியாவும் இல்லை. விஸ்காம் படிக்கும் போது தெருக்கூத்து பயிற்சியில் ஈடுபட்டேன். அப்போது நடிப்பில் ஆர்வம் வந்தது. குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பிடித்த சினிமா இயக்குனர்?
'இன் தி மூட் பார் லவ்' என்ற கொரியன் படத்தை இயக்கிய வாங் கர் வை என்ற இயக்குனரை பிடிக்கும். தமிழில் மணிரத்னம், நலன் குமாரசாமி, லோகேஷ் கனகராஜ்.

கிராமத்து படங்களில் பார்க்கலாமா..
எனக்கும் ஆசைதான். நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்.

எதிர்கால கனவுகள்
நிறைய படங்களில் நடிக்க வேண்டும். சர்வதேச அளவில் தமிழ் படங்களை கொண்டு செல்ல வேண்டும். 'சில சமயங்களில்' படத்தை போன்ற கதை களத்தை விரும்புகிறேன்.

தெகிடி மாதிரி மீண்டும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் எப்போது?
நான் நடித்து வரும் 'போர்த்தொழில்' சஸ்பென்ஸ் த்ரில்லர் தான். இது வரவேற்பை பெறும் என நம்புகிறேன்.

நித்தம் ஒரு வானம்
படம் பற்றி ஸ்பெஷலான படம். கல்லுாரி மாணவன், நகரத்து இளைஞன், வெகுளித்தனமான ஊர்க்காரன் என மூன்று கதாபாத்திரங்களில் சந்தோஷமாக நடித்தேன்.

2022ல் மிகவும் பிடித்த படம்
தமிழில் மண்டேலா, ஹாலிவுட்டில் அவதார் தி வே ஆப் வாட்டர்.

நீங்கள் இயற்கை விரும்பியாமே
கொரோனா ஊரடங்கில் சொந்த ஊரான ஈரோட்டில் இருந்தேன். அன்று தான் இயற்கையின் அருமை புரிந்தது. இயற்கையான காட்சி உள்ள இடங்களுக்கு பயணித்தும், முடிந்த வரை இயற்கையோடு இணைந்தும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

வெற்றி என்பதன் வரையறை
வெற்றி என்பது நிம்மதியான துாக்கம். என் வேலைக்கு தன்னிறைவு ஆவது அவ்வளவு எளிதல்ல. இப்படி செய்திருக்கலாம். அப்படி செய்திருக்கலாம் என தோன்றும். முடிந்த வரை தன்னிறைவுடன் நடிப்பதே வெற்றி.

அடுத்தடுத்து வரும் படங்கள்
போர்தொழில், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் காதல் படம், சபா, பா.ரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்திய படம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.