”பல உலக அழகிகள் கூடி” – மீண்டும் ஐஸ்வர்யாவுடன் நடிக்கப்போகிறாரா அஜித்? – AK62 அப்டேட் இதோ!

அஜித்தின் துணிவு படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் இதே வேளையில் அவரது 62வது படத்துக்கான அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்பது #AK62 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாவதின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஏற்கெனவே அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் இயக்க, அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியான நிலையில் தற்போது தியேட்டர் ரிலீசுக்கு பிந்தைய ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமத்தை பிரபல ஓ.டி.டி. நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியிருப்பதாக தென் இந்தியாவுக்கான நெட்ஃப்ளிக்ஸ் ட்விட்டர் பக்கத்திலெயே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, 11 மணியளவில் ஆரம்பிக்கலாங்களா என்ற ட்வீட்டோடு #NetflixLaEnnaSpecial என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு ரசிகர்களை யூகிக்க வைத்த நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், அடுத்த சில நிமிடங்களிலேயே, “சில்லா சில்லா மோடிலேயே இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் முடியவில்லை.” எனக் கேப்ஷனிட்டு, “திரையரங்குக்கு பிந்தைய AK62 படத்தின் ஓ.டி.டி. உரிமம் நெட்ஃப்ளிக்ஸ் பெற்றிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும்.” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதுபோக மற்றுமொரு அப்டேட்டாக அஜித்தின் இந்த 62வது படத்தில் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து ஐஸ்வர்யா ராய் அல்லது மற்ற யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்ற எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக அஜித்தின் ஐஸ்வர்யா ராயும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கதையின் முக்கியமான கேரக்டரை ஏற்று ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் அடுத்த பாகம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அஜித்தின் 62வது படத்திலும் ஐஸ்வர்யா ராஜ் இணையவுள்ளதாக கசிந்துள்ள தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகபடுத்தியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.