
ஜப்பான் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் கார்த்தி
சர்தார் படத்தை அடுத்து ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. கார்த்தியின் 25வது படமான இப்படத்தை ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் பொங்கலை ஒட்டி இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கார்த்தி இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். மாறுபட்ட ஹேர் ஸ்டைல், கழுத்தில் டாலர் செயின் அணிந்துள்ளார். ரசிகர்களுக்கு கார்த்தி கொடுத்த இந்த பொங்கல் பரிசுக்கு அவரது ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.