நாமக்கல் மாவட்டத்தில் மொபட் மீது டிராக்டர் மோதியதில் கணவர் உயிரிழந்துள்ளார் மற்றும் மனைவி படுகாயமடைந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் அல்லாளபுரம் பொம்மம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஜெயராஜ்(65). இவருடைய மனைவி சுமதி (60). இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது அல்லாளபுரம் பகுதி அருகே சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டர் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த கணவன், மனைவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில் ஜெயராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சுமதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் சிலுவம்பட்டியை சேர்ந்த தமிழரசனை கைது செய்தனர்.