அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளக் கொடுப்பனவு தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவை குறித்த தினத்திலேயே செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பதவிநிலை உத்தியோகத்தர்களின் சம்பளத்தை குறித்த சில தினங்களுக்குப் பின் செலுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் நேற்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அரச செலவு முகாமைத்துவம்

ஜனவரி மாதம் தொடக்கம் எதிர்வரும் ஒரு சில மாதங்கள் அரச செலவுகளை முகாமைத்துவப்படுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி திறைசேரியால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.