வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கவர்னர் வி.கே.சக்சேனா எனது தலைமை ஆசிரியர் அல்ல. மக்கள் என்னை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்றைய சட்டசபையில் பேசுகையில் குறிப்பிட்டார்.

தனது தலைமையிலான அரசின் பணிகளில் துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா தலையிடுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில் இன்று(ஜன.,17) டில்லியில் நடந்த சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. காலம் மிகவும் சக்தி வாய்ந்தது. எங்கள் அரசு மக்களை துன்புறுத்தாது. நிரந்தரமாக ஆட்சியில் இருப்பேன் என்று நினைத்தால் அது நடக்காது. இன்று நாங்கள் டில்லியில் ஆட்சியில் இருக்கிறோம். அதேபோல் பஞ்சாபில் ஆட்சி அமைத்துள்ளோம்.

மத்திய அரசு பா.ஜ., கையில் உள்ளது. இது நிரந்தரம் அல்ல. ஆசிரியர்களை பயிற்சிக்கு அனுப்பும் திட்டங்களுக்கு கவர்னர் இரண்டு முறை எதிர்ப்பு தெரிவித்தார். இது அவரது நோக்கங்கள் நல்லதல்ல என்பதைக் காட்டுகிறது. கவர்னர் வி.கே.சக்சேனா எனது தலைமை ஆசிரியர் அல்ல. மக்கள் என்னை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். கவர்னர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது.
பா.ஜ., வின் பல எம்.பி.க்களும் அவர்களது குழந்தைகள் வெளி நாடுகளில் கல்வி கற்கின்றனர். ஏழைகளின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்றால், அவர்கள் அதை தடுக்க முயற்சி செய்கின்றனர். பா.ஜ., வினர் முதலாளித்துவ மனபான்மை உடையவர்கள். அதேபோல் அந்த குணம் டில்லி கவர்னருக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement