இந்தியாவில் டாப் 1% பணக்காரர்களிடம் நாட்டின் 40% சொத்துகள் குவிந்துள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது. இதை உங்களால் நம்பமுடிகிறதா?
உலக பொருளாதார கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பிரிட்டனை சேர்ந்த ‘ஆக்ஸ்ஃபேம் இண்டர்நேஷனல்’ என்ற அமைப்பு இந்தியாவின் வருடாந்திர சமத்துவமின்மை அறிக்கையை நேற்று வெளியிட்டது.

இந்த அறிக்கையில் இந்தியாவில் டாப் 1% பணக்காரர்களிடம் நாட்டின் 40% சொத்துகள் குவிந்துள்ளது என்றும், அடித்தட்டு மக்களிடம் வெறும் 3% சொத்துகள் மட்டுமே உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தவிர இந்த அறிக்கையில் 50% அடித்தட்டு மக்கள் 64% ஜி.எஸ்.டி-க்கு பங்களிக்கின்றனர் என்றும் டாப் 10% பணக்காரர்கள் வெறும் 3% ஜி.எஸ்.டி-க்கு தான் பங்களிக்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த அறிக்கையில்,
-
இந்தியாவில் உள்ள டாப் 10 பணக்காரர்களுக்கு 5% வரி விதிப்பதன் மூலம் படிப்பில் இருந்து இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு கொண்டுவர தேவைப்படும் பணத்தை பெற முடியும்.
-
கெளதம் அதானியின் குழும நிறுவனங்களின் 2017-2021-ம் ஆண்டிற்கான unrealized gain( விற்காமல் இருக்கும் சொத்தின் மீதான லாபம் ) மீது வரி விதிப்பதன் மூலம் ரூ.1.79 லட்சம் கோடி பெற முடியும். இந்த பணத்தை வைத்து இந்தியாவில் உள்ள 50 லட்ச தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டு முழுவதும் சம்பளம் கொடுக்க முடியும்.

-
இந்தியாவில் உள்ள கோடிஸ்வரர்களின் மொத்த சொத்துக்கு 2% வரி விதிப்பதன் மூலம் ரூ.40,423 கோடி பெறலாம். இது ஊட்டசத்து குறைப்பாடு உள்ளவர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உதவும்.
-
இந்தியாவில் உள்ள டாப் 10 கோடிஸ்வரர்களுக்கு 5% ஒரு முறை வரி விதிப்பதன்மூலம் ரூ.1.37 லட்சம் கோடி பெறலாம். இது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (ரூ. 86,200 கோடி) மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் (ரூ. 86,200 கோடி) நிதியை விட 1.5 மடங்கு அதிகம்.
-
ஆண்-பெண் என இருபாலினரும் செய்யும் வேலைக்கு, ஆண் 1 ரூபாய் சம்பளம் வாங்கும் நிலையில் பெண் 63 பைசா ஊதியமாக பெறுகிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.