விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைக்க இன்று மதுரை அலங்காநல்லூர் வந்தடைந்தார்.
அப்போது, மதுரையில் இருக்கும் தனது பெரியப்பா மு.க அழகிரியை சந்தித்து ஆசி பெற்றார். இதன் பின் அலங்காநல்லூர் சென்ற உதயநிதி ஸ்டாலின் அங்கு நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைத்தார்.
இந்த நிலையில் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசளிக்கப்பட்டு வருகின்றது. அலங்காநல்லூர் வாடி வாசலுக்கு அருகில் பார்வையாளர் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த கேலரியில் இருக்கும் பார்வையாளர்கள் மாற்றப்படுகின்றனர்.
இதில் ஏற பொதுமக்கள் மற்றும் வெளி மாநில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது சிலர் தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதை பார்த்த போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியதில் சிறுவர்கள் வயதானவர்கள் பலரும் காயமடைந்தனர். இதன் காரணமாக அங்கே சற்று நேரம் பரபரப்பு நிலவியது.