யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவில் தமிழரசுக் கட்சிக்குள் பலத்த போட்டி


யாழ் மாநகர சபையில் முதல்வர் தெரிவு

யாழ் மாநகர சபையில் ஜனவரி 19ஆம் திகதி நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இன்று இடம் பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு வந்துள்ளது.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில இன்று(17) மாலை கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு ஜனவரி 19 ஆம் திகதி வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்து

இந் நிலையில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை தெரிவு செய்வது என்பதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்து நிலவுகின்றது.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழரசு கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது யாழ் மாநகர முதல்வர் வேட்பாளரை தெரிவு செய்வதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவில் தமிழரசுக் கட்சிக்குள் பலத்த போட்டி | Jaffna Meeting Of The Itak

சொலமன் சிறில் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது சாலச் சிறந்தது

முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சொலமன் சிறில், இம்மானுவேல் ஆனோலட் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் தெரிவுக்கு முன்வைக்கப்பட்டதால் கூட்டம் இணக்கமின்றி முடிந்தது, இப்போதைய குழப்பமான மாநகரச் சூழ்நிலையில் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சொலமன் சிறில் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது சாலச் சிறந்தது எனும் கருத்து அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப் படுகிறது.

நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு மீண்டும் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் தொடர்பாக இறுதி முடிவெடுப்பது என கட்சியால் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவில் தமிழரசுக் கட்சிக்குள் பலத்த போட்டி | Jaffna Meeting Of The Itak

கட்­சித் தலை­மை­யி­டம் கடி­தம்

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேய­ராக, முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சொல­மன் சிறிலை நிய­மிக்க வேண்­டும் எனக் கோரும் கடி­தம், கட்­சித் தலை­மை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

யாழ்ப்­பாண மாந­கர சபைத் தேர்­த­லில் வெற்­றி­ பெற்ற வட்­டார உறுப்­பி­னர்­கள் சிலர் இணைந்து இந்­தக் கடி­தத்தை கைய­ளித்­துள்­ள­னர் என்­றும் அறி­ய­மு­டி­கின்­றது.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேயர் வேட்­பா­ள­ராக இ.ஆனோல்ட் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தார்.

ஆனால் முன்­னாள் நாடா­ளு­ட­மன்ற உறுப்­பி­னர் சொல­மன் சிறி­லுக்கு அந்­தப் பதவி வழங்­கப்­பட வேண்­டும் என்று ஆரம்­பத்­தி­லி­ருந்தே கட்­சிக்­குள் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு வந்­ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவில் தமிழரசுக் கட்சிக்குள் பலத்த போட்டி | Jaffna Meeting Of The Itak



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.