மும்பை : சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமுக்கு இரண்டாவது மனைவி இருப்பதாக அவரது சகோதரி மகன், தேசிய புலனாய்வு அமைப்பிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மும்பையில் பிறந்து வளர்ந்த நிழல் உலக குற்றவாளி தாவூத் இப்ராஹிம், மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாக இருக்கிறார்.
இது தொடர்பான வழக்கில், தாவூத்தின் சகோதரி ஹசீனா பார்க்கரின் மகன் அலி ஷா உள்ளிட்ட சிலரை, கடந்த ஆண்டு, தேசிய புலனாய்வு அமைப்பினர் மும்பையில் வைத்து கைது செய்தனர். அப்போது, தாவூத்தின் மருமகன் அலி ஷாவிடம் வாக்குமூலம் பெற்றனர். அது தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் அலி ஷா கூறியிருப்பதாவது:
தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ஆனால், முதல் மனைவி மெஜாபின் ஷேக்கை இன்னும் விவாகரத்து செய்யவில்லை.
மெஜாபினை புலனாய்வு அமைப்புகள் கண்காணிப்பதால், தாவூத் அவரை விவாகரத்து செய்து விட்டது போல நாடகமாடுகிறார். தாவூத் இப்ராஹிம் தன் குடும்பத்தினருடன் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அப்துல்லா காசி பாபா தர்காவுக்கு பின் உள்ள பகுதியில் தான் வசிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement