Fact Check:இங்கிலாந்து பிரதமரா? கனடா பிரதமரா? – உண்மையில் பொங்கல் விருந்து கொடுத்தது யாரு?

இந்தியாவைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் லண்டனில் தனது அலுவலக ஊழியர்களுக்கு பாராம்பரிய பொங்கல் விருந்து அளித்ததாகவும், அதேநேரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தான் பொங்கல் விருந்து கொடுத்ததாகவும், ஒரு வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், இது இரண்டுமே தவறான தகவல் என்று தெரிய வந்துள்ளது.
தமிழர்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தப் பண்டிகை என்றால் அது பொங்கல் பண்டிகை தான். அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படும் வேளையில், சங்கக் காலம் தொட்டு இன்றுவரை பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து விரிந்துக் கிடந்தாலும், இந்தப் பண்டிகையை கொண்டாட யாரும் தவறுவது இல்லை. குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள், தங்களுக்கு என்று ஒரு சங்கத்தை உருவாக்கி, அங்குள்ள வெளிநாட்டவர்களையும் அழைத்துப் பொங்கல் கொண்டாடி மகிழ்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் கனடா நாட்டில் தெற்கு அண்டாரியோ மாகாணத்தில் உள்ள வாட்டர்லூ என்றப் பகுதியில், தமிழ் கலாச்சார சங்கம் ஒன்று பொங்கல் விழா கொண்டாடியுள்ளது. இந்த விழாவிற்கு வாட்டர்லூ பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், மேயர், உள்ளூர் அரசியல்வாதிகள் என அந்நாட்டைச் சேர்ந்தவர்களை அழைத்து நம்மூர் பாரம்பரிய முறையில் வாழை இலையில் பொங்கல் விருந்து தமிழர்களால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் உணவை அந்நாட்டைச் சேர்ந்த அவர்கள், தங்களது கைகளிலும், சிலர் ஸ்பூன்களிலும் ரசித்துச் சாப்பிட்டனர்.

இந்த வீடியோ வாட்டர்லூ தமிழ் கலாச்சார சங்கத்தின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிடப்பட்ட நிலையில், சிலர் தவறாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது அலுவக ஊழியர்களுக்குத்தான், பொங்கல் விருந்து அளித்ததாக அந்த வீடியோவை தங்களது ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இதனை இந்தியாவின் பல பிரபல ஆங்கில ஊடகங்களும் பதிவிட்ட நிலையில், சில தமிழ் யூட்யூப் சேனல்கள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த பொங்கல் விருந்து என்று பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், வாட்டர்லூ தமிழ் கலாச்சார சங்கத்தின் பொங்கல் விருந்துதான் அது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
<blockquote class=”twitter-tweet”>
Pongal lunch hosted by PM Rishi Sunak in London.

Grt idea …! Will try to do for my north Indian frnds pic.twitter.com/NKuiatLELX
— ThePonderinGirl (@DtPushpaAnand) January 17, 2023

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.