சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் மறைந்த வாழப்பாடியார் 83வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மந்தவெளி ராஜீவ் பவனில் அமைந்துள்ள வாழ்ப்பாடியார் சிலைக்கு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், எம்.பி.க்கள் ஜி.கே.வாசன், விஜய்வசந்த் உள்பட பலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செய்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு 6முறை தலைவராகவும், இரண்டு முறை மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் மறைந்த வாழப்பாடி இராமமூர்த்தி. இவரது சொந்த ஊர், சேலம் மாவட்டத்தின் வாழப்பாடி. […]
