மெல்பர்ன், ஆஸ்திரேலியாவில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இந்தியாவைச் சேர்ந்த மாணவர் பலியானார்.
பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் நடந்த கார் விபத்தில், நம் நாட்டைச் சேர்ந்த, 21 வயது மாணவர் குணால் சோப்ரா உயிரிழந்தார்.
இவர் பஞ்சாபின் ஹோஷியார்பூரைச் சேர்ந்தவர். குணால் தன் காரை எதிர் திசையில் ஓட்டிச் சென்று சாலையைக் கடக்க முயன்ற போது, எதிரே வந்த லாரியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். குணால் கடந்த ஆண்டு பிப்ரவரியில், மாணவர்களுக்கான ‘விசா’வில் ஆஸ்திரேலியா சென்று படித்து வந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இது நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான், ஷெப்பர்ட்டன் நகரில் நடந்த மற்றொரு சாலை விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement