பஞ்சாப் மாநிலத்தில் 30 பயணிகளை விட்டுவிட்டு புறப்பட்ட ஸ்கூட் விமானம்: விளக்கம் அளிக்க விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு ..!!

பஞ்சாப்: பஞ்சாப் விமானநிலையத்தில் டிக்கெட் எடுத்த 30 பயணிகள் இன்றி விமானம் புறப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமானநிலையத்தில் இருந்து இரவு 7.55 மணிக்கு சிங்கப்பூரை சேர்ந்த ஸ்கூட் ஏர் லைன்ஸ் விமானம் 280 பேருடன் புறப்படுவதாக டிக்கெட் விற்கப்பட்டது. ஆனால் பிற்பகல் 3 மணிக்கே அந்த விமானம் புறப்பட்டுச் சென்றதால் அதன் பின்னர் வந்த 30 பயணிகள் விமானத்தை தவறவிட்டனர்.

இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. விமானம் புறப்படும் நேரம் மாற்றப்பட்டது குறித்து இ-மெயில் மூலம் பயணிகள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. விமானத்தை தவற வீட்ட 30 பயணிகளும் ஒரு ஏஜென்ட் மூலம் டிக்கெட்டை பெற்றதாகவும் அதனால் விமானம் புறப்படும் நேரம் மாற்றப்பட்டது குறித்து அவர்களுக்கு தகவல் சென்றடைய வில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு அமிர்தசரஸ் விமான நிலையம் மற்றும் ஸ்கூட் ஏர் லைன்ஸ்க்கு விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 9ம் தேதி பெங்களூருவில் இருந்து டெல்லி சென்ற கோபோஸ்ட் விமானம் 50 பயணிகளை மறந்து விட்டு சென்றது. இது தொடர்பாக விமான நிறுவன ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கபட்ட நிலையில் 50 பயணிகளும் வேறு விமானம் மூலம் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.