டெல்லி: ஜிபிஎப் (GPF) ஆண்டு சந்தாத் தொகை உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக அறிவிப்புகள் வெளியான நிலையில், தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நிதியாண்டில் பொது வருங்கால வைப்பு நிதிக்கு (GPF) ரூ.5 லட்சம் சந்தா செலுத்தினால் நிதி (மத்திய சேவை) விதிகள், 1960 இன் படி, சந்தாதாரரைப் பொறுத்தமட்டில் GPFக்கான சந்தா தொகையானது, 6% க்கும் குறைவாக இருக்கக்கூடாது மற்றும் சந்தாதாரரின் மொத்த ஊதியத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது. […]
