பிரித்தானியாவில் நாளும் 50 பேர்கள் வரையில் இறப்பு: வெளிவரும் அதிர்ச்சி காரணம்


பிரித்தானியாவில் கடும் குளிரை எதிர்கொள்ள முடியாமல் நாளும் 45 பேர்கள் இறந்துள்ளதாக தேசிய புள்ளிவிவரங்கள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 13,400 மரணங்கள்

விலைவாசி உயர்வு வதைக்கும் முன்னர், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 மார்ச் வரையான காலகட்டத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் 13,400 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், குளிர்காலம் தவிர்த்துள்ள மாதங்களை ஒப்பிடுகையில் இது அதிக எண்ணிக்கை எனவும் கூறுகின்றனர்.

பிரித்தானியாவில் நாளும் 50 பேர்கள் வரையில் இறப்பு: வெளிவரும் அதிர்ச்சி காரணம் | Cold House Contributing To Excess Deaths

@Alamy

ஆனால் தற்போது விலைவாசி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வும் மக்களை அதிகமாக பாதிக்கும் சூழலில், குறிப்பிட்ட ஆய்வறிக்கையானது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

மட்டுமின்றி, மின் கட்டண உயர்வும் எரிவாயு கட்டணமும் குறிப்பிட்ட சில மக்களை உணவா அல்லது வீட்டுக்கு வெப்பமூட்டுவதா என்பதில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டிய கடுமையான சூழலில் தள்ளும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நாளுக்கு 45 பேர்கள் வரையில்

குளிர்காலத்தில் குடியிருப்பை வெப்பமூட்டாதன் மூலமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த ஆண்டு அதிகமாக 4,020 பேர்கள் இறந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
இது, நாளுக்கு 45 பேர்கள் வரையில் இறந்துள்ளதற்கு ஒப்பாகும். மட்டுமின்றி, தற்போது அதிகரித்துள்ள கட்டணத்தைவிட எரிசக்திக்கு பாதி கட்டணமே வசூலிக்கப்பட்டிருந்தது.

பிரித்தானியாவில் நாளும் 50 பேர்கள் வரையில் இறப்பு: வெளிவரும் அதிர்ச்சி காரணம் | Cold House Contributing To Excess Deaths

@getty

மேலும், சராசரி எரிசக்தி கட்டணம் ஆண்டுக்கு 1,271 பவுண்டுகளில் இருந்து தற்போது 2,500 பவுண்டுகள் என அதிகரித்துள்ளது.
உக்ரைனில் போர் காரணமாக எரிசக்தி கட்டணம் பிரித்தானியாவில் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டு வந்தாலும்,

பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் முன்னரே எரிவாயு மற்றும் மின் கட்டணம் அதிகரித்தே வந்துள்ளது.
கடந்த அக்டோபரில் மட்டும் 4.5 மில்லியன் குடும்பங்கள் எரிசக்தி கட்டணம் செலுத்த முடியாமல் தத்தளித்ததாகவே கூறப்படுகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.