Hansika: அய்யோ, எலும்பெல்லாம் தெரியுதே: ஹன்சிகாவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

திருமதி ஹன்சிகா சொஹைல் கதூரியாவின் சமீபத்திய புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஹன்சிகா
புஸு புஸுனு கோலிவுட் வந்த ஹன்சிகாவை தமிழ் ரசிகர்கள் தலைமீது வைத்து கொண்டாடினார்கள். என்ன ஒரு அழகு என்று பாராட்டினார்கள். ஹன்சுமாவுக்கு அழகே அவரின் வெயிட் தான் என்றார்கள். இந்நிலையில் தான் ஒரு சுபயோக சுபதினத்தில் தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ஆனார் ஹன்சிகா. அதை பார்த்து அவரின் ரசிகர்களுக்கு லைட்டா ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது.
திருமணம்ஹன்சிகா உங்களை இப்படி பார்க்கவே முடியவில்லை, ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எங்களுக்கு பழைய ஹன்சுமா தான் வேண்டும். தயவு செய்து வெயிட் போடுங்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்கள். இந்நிலையில் தான் ஹன்சிகாவுக்கும், அவரின் காதலரான சொஹைல் கதூரியாவுக்கும் திருமணம் என தகவல் வெளியானது. அதை பார்த்து ஹன்சிகா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ரசிகர்கள்திருமணம் என்றால் டயட்டில் இருக்க மாட்டார் ஹன்சிகா. நன்றாக சாப்பிட்டு வெயிட் போட்டு பழையபடி புஸு புஸுனு ஆகிவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் திருமணம் முடிந்த பிறகு ஹன்சிகா மேலும் ஒல்லியாகிவிட்டார். இதை பார்த்த ரசிகர்களோ, கல்யாணத்தப்ப கூட சாப்பிடாமல் இருந்தாரா என கேள்வி எழுப்பினார்கள்.

லேட்டஸ்ட்ஜிகுஜிகுனு ஸ்கர்ட், வெள்ளை நிற சட்டையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா. அதை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு. அதற்கு காரணம் ஹன்சிகா ரொம்ப ஒல்லியாக இருப்பது தான். என்ன கை, கால் எல்லாம் குச்சி, குச்சியாப் போச்சே என ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.

எடை View this post on Instagram A post shared by Hansika Motwani (@ihansika)
கோரிக்கைஹன்சிகா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, எப்படி இருந்த ஹன்சுமா இப்படி ஆகிவிட்டாரே. எலும்பெல்லாம் தெரியுதே. காலில் கூட சதையை காணோம். ஹன்சுமா உடம்புக்கு எதுவும் பிரச்சனை இல்லையே?. உங்களை இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கு. தயவு செய்து கொஞ்சமாவது வெயிட் போடுங்கமா என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்ப்பில்ல ராஜாகஷ்டப்பட்டு தன் எடையை குறைத்து ஸ்லிம்மாகியிருக்கிறார் ஹன்சிகா. மீண்டும் வெயிட் போட அவருக்கு விருப்பம் இல்லை. உணவுக் கட்டுப்பாடு, யோகா, ஒர்க்அவுட்டில் தீவிரம் காட்டி வருகிறார். அதனால் ரசிகர்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேறாது. இருப்பினும் வெயிட் போடுங்க என்று ஹன்சிகாவிடம் கோரிக்கை விடுப்பதை மட்டும் நிறுத்துவதாக இல்லை என்கிற முடிவில் இருக்கிறார்கள் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.