யார் இந்த ராதிகா மெர்ச்சன்ட்? அம்பானி வீட்டுக்கு வரும் மருமகள்… விரைவில் டும் டும் டும்!

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக திகழ்பவர் முகேஷ் அம்பானி. சர்வதேச கோடீஸ்வரர்களுக்கு பலமான போட்டியாளராக வளர்ந்து வருகிறார். இவரது மனைவி நீடா அம்பானி. இந்த தம்பதிக்கு பிறந்த மகன் ஆனந்த அம்பானியின் திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவரை திருமணம் செய்து கொள்பவரும் மிகப்பெரிய தொழிலதிபரின் மகள்.

அம்பானி வீட்டு நிச்சயதார்த்தம்

அவர் ஆங்கர் ஹெல்த்கேர் தலைமை செயல் அதிகாரி விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட். இந்நிலையில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் மும்பையில் நேற்று நடந்த பிரம்மாண்ட நிச்சயதார்த்த விழாவில் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

பிரபலங்கள் பங்கேற்பு

இதில் பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர். குஜராத் மாநிலத்திற்கே உரித்தான பாரம்பரிய சடங்குகள் உடன் சிறப்பான முறையில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்பானி குடும்பத்தினர் ஒன்றாக மேடை ஏறி நடனம் ஆடியது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

யார் இந்த ராதிகா மெர்ச்சன்ட்?

குஜராத் மாநிலம் கட்ச் நகரை பூர்வீகமாக கொண்டவர். பிறந்து வளர்ந்தது எல்லாம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தான். இந்த நகரில் தான் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார். மேற்படிப்பிற்காக நியூயார்க் சென்றார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

தொழில் ஆர்வம்

இதையடுத்து மும்பை திரும்பி தொழில் யுக்தி ஆலோசகராக பயிற்சி பெற்றார். தேசாய் & தேவாஞ்சி மற்றும் இந்தியா ஃபர்ஸ்ட் ஆகிய நிறுவனங்களை நிர்வகிக்க தொடங்கினர். மேலும் தனது குடும்பத்தின் தொழில் தொடர்பான விஷயங்களிலும் பங்களிப்பை செலுத்தி வருகிறார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

சமூகப் பணி

சமூக மாற்றத்திற்கான பணிகள் மீது ஆர்வம் கொண்டவர். தொழில் துறையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்ற விருப்பம் உடையவர். உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் தீவிரம் காட்டுபவர். இவர் மும்பையில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ராதிகா மெர்ச்சன்ட்டிற்கு சொந்தமாக விலை உயர்ந்த கார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலதிபர் குடும்பம்

ராதிகா மெர்ச்சன்ட்டின் தந்தை விரேன் மெர்ச்சன்ட் மிகப்பெரிய தொழிலதிபர். ஏ.டி.எஃப் புட்ஸ் லிமிடெட், ஆங்கர் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் என பல்வேறு தொழில்களை நிர்வகித்து வருகிறார். இவரது மனைவி ஷைலா மெர்ச்சன்ட்டும் ஒரு தொழிலதிபர். இவர்களுக்கு அஞ்சலி மெர்ச்சன்ட், ராதிகா மெர்ச்சன்ட் என இரண்டு மகள்கள். அதில் ஒருவருக்கு தான் முகேஷ் அம்பானி மகனை திருமணம் செய்து வைக்கவுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.