சென்னை; தமிழ்கடவுள் முருகன் குடிகொண்டிருக்கும் பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு ஆகம விதிப்படி நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி முருகன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில், பழனி முருகன் கோயில் குடமுழுக்கு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. […]
