உலகின் தலைசிறந்த CEO பட்டியலில் முகேஷ் அம்பானி 2-ஆம் இடம்., டாப் 10 இடங்களில் 6 பேர் இந்திய வம்சாவளியினர்!


உலகின் தலைசிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) பட்டியலில் ரிலையன்ஸ் நிறுனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) பட்டியலிலை பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

அதன்படி, என்விடியா (Nvidia) நிறுவன சி.இ.ஓ ஜென்சன் ஹுவாங் (Jensen Huang) முதலிடம் பிடித்துள்ளார்.

இப்பட்டியலில் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா ( Satya Nadella), கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை (Sundar Pichai) போன்றவர்களை பின்னுக்கு தள்ளி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி2-வது இடத்தை பிடித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த CEO பட்டியலில் முகேஷ் அம்பானி 2-ஆம் இடம்., டாப் 10 இடங்களில் 6 பேர் இந்திய வம்சாவளியினர்! | Mukesh Ambani 2 Top Ceo List 6 Indian Origin

சத்யா நாதெல்லா 3-வது இடத்திலும், சாந்தனு நாராயணன் 4-ஆம் இடத்திலும், சுந்தர் பிச்சை 5-ஆம் இடத்திலும் உள்ளனர்.

முதல் 10 இடங்களில் 6 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 பட்டியல்

1- ஜென்சன் ஹுவாங் – என்விடியா
2- முகேஷ் அம்பானி – ரிலையன்ஸ்
3- சத்யா நாதெல்லா – மைக்ரோசாப்ட்
4- சாந்தனு நாராயண் – அடோப்
5- சுந்தர் பிச்சை – கூகுள்
6- புனிட் ரென்ஜென் – டெலாய்ட்
7- Estee Lauder – Fabrizio Freda
8- நடராஜன் சந்திரசேகரன் – டாடா
9- பியூஷ் குப்தா – டிபிஎஸ்
10 – ஹுவாடெங் மா – டென்சென்ட்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.