
காலில் காயம் ஏற்பட்டது எப்படி? – ஆலியா மானசா வெளியிட்ட வீடியோ
சின்னத்திரை நடிகையான ஆலியா மானசாவுக்கு சில தினங்களுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தனக்கு அந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், சமீபத்தில் நடந்த கபடி போட்டி ஒன்றில் சிங்கப்பெண்கள் என்ற அணியில் தான் இடம்பெற்றதாகவும், அந்த கபடி விளையாட்டின் போது தனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். கபடி விளையாடிய போது தனது காலில் முறிவு ஏற்பட்டு தான் வலியால் துடித்த அந்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ள ஆலியா மானஸாவை ஒரு மாத காலம் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்களாம். ஆலியா தற்போது இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.