11 மாதங்கள் தூங்கவில்லை..! 16 வயது ரஷ்ய சிறுவனுக்கு ஏற்பட்ட அரிய வகை நோய்


ரஷ்யாவில் தூக்கமின்மை பிரச்சனையுடன் 11 மாதங்களாக தொடர்ந்து போராடி வந்த 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தூக்கமின்மையால் உயிரிழந்த சிறுவன்

ரஷ்யாவின் மாஸ்கோவில் familial fatal insomnia(FFI) என்ற மிகவும் அரிதான தூக்கமின்மை நிலையுடன் 11 மாதங்கள் போராடி வந்த 16 வயது சிறுவன், தீவிர மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டும் ஜனவரி 18ம் திகதி பரிதாபமாக உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்கோவை தளமாக கொண்ட செய்திதாள் MK-யின் தகவலின் படி, மருத்துவர்கள் 2022 இன் இறுதியில் மட்டுமே இந்த நிலையை கண்டறிய முடிந்தாக தெரியவந்துள்ளது.

11 மாதங்கள் தூங்கவில்லை..! 16 வயது ரஷ்ய சிறுவனுக்கு ஏற்பட்ட அரிய வகை நோய் | Russian Teen 16 Dies After Rare InsomniaGetty Images/EyeEm

2022 பிப்ரவரியில் விவரிக்க முடியாத பீதி அவரை தாக்கிய போது, அந்த சிறுவன் முதன்முதலில் தூக்கமின்மை கோளாறுக்கான அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கினார்.

இறப்பதற்கு முந்தைய மாதம் சிறுவன் தனது உணவு விழுங்கும் தன்மையை இழந்தார், இதனால் பெற்றோர்கள் அவருக்கு குழாய் மூலம் உணவளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நோயின் தீவிரத்துடன் மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்கிய நிலையில், சிறிது நேரத்திலேயே அந்த வாலிபரின் உறுப்புகள் செயலிழக்க தொடங்கியுள்ளன.

11 மாதங்கள் தூங்கவில்லை..! 16 வயது ரஷ்ய சிறுவனுக்கு ஏற்பட்ட அரிய வகை நோய் | Russian Teen 16 Dies After Rare InsomniaAFP via Getty Images


நோய் அறிகுறிகள்

இந்த FFI-ன் அனைத்து நிகழ்வுகளும் PRNP மரபணுவில் உள்ள ஒரு குறிப்பிட்ட மாறுபாட்டின் காரணமாக நிகழ்கின்றன மற்றும் அவை ஒரு தன்னியக்க மேலாதிக்க வடிவத்தில் உருப்பெறுகின்றன.

மிகவும் பொதுவான அறிகுறிகள் தூக்கக் கலக்கம், மனநலப் பிரச்சினைகள், உடல் எடை இழப்பு மற்றும் சமநிலை சிக்கல்கள் ஆகும்.
உயர் இரத்த அழுத்தம், அதிகப்படியான வியர்வை மற்றும் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஆகியவை மற்ற அறிகுறிகளாகும். 

இந்த அறிகுறிகள் காலப்போக்கில் மோசமாகிவிடும்.
இது உலக அளவில் சில டஜன் மக்களை மட்டுமே பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.