
சிவகார்த்திகேயனை இயக்கும் முருகதாஸ்
இயக்குனர் முருகதாஸ் கடைசியாக தமிழில் ரஜினியை வைத்து 2020ல் தர்பார் படத்தை இயக்கினார். இந்தபடம் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து விஜய்யை வைத்து அவர் படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் விஜய் மறுத்துவிட்டார். இதன்பின் அவரின் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சில நடிகர்களுடன் இணைவதாக செய்திகள் மட்டுமே வந்தன.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அவர் படம் இயக்க உள்ளாராம். ஏற்கனவே இதுபற்றிய செய்திகள் வந்தபோதிலும் இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள். தற்போது சிவகார்த்திகேயன் ‛அயலான்' படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்து மாவீரன் படத்தில் நடிக்கிறார். அதன்பின் கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பவர் அதன்பின் முருகதாஸ் படத்தில் இணைய உள்ளாராம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அதிரடி ஆக் ஷன் கதையில் தயாராகிறது.