மதுரை: மதுரை, கே.கே.நகரைச் சேர்ந்த பொழிலன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் மாதவிடாய் காலங்களில் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே, மாணவிகளின் நலன் கருதி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை வைக்குமாறும், பயன்படுத்திய நாப்கின்களை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த தேவையான வசதிகளையும் ஏற்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர், தமிழ்நாடு சமூக நலத்துறை, உயர்கல்வித்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர்கள் பதிலளிக்கவும், யூஜிசி தரப்ைப எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.
