48 மணி நேரத்தில் அமெரிக்காவை உலுக்கிய இன்னொரு சம்பவம்… இருவேறு இடங்களில் கொத்தாக சடலங்கள்


கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் 7 சீன பண்ணை தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி சிக்கியுள்ளார்.

இருவேறு பண்ணைகளில்

ஏழு சீன பண்ணை தொழிலாளர்களும் துப்பாகியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, இருவேறு பண்ணைகளில் இந்த 7 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
ஒரு பண்ணையில் 4 சடலங்களும் இன்னொரு பண்ணையில் 3 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டது.

48 மணி நேரத்தில் அமெரிக்காவை உலுக்கிய இன்னொரு சம்பவம்... இருவேறு இடங்களில் கொத்தாக சடலங்கள் | Fatal Shooting Seven Chinese Farm Workers

@abc7

மேலும் சம்பவத்தின் போது சிறார்களும் அப்பகுதியில் காணப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் 67 வயதான Zhao Chunli என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காளான் பண்ணையில் பணியாற்றி வந்துள்ளார். கொல்லப்பட்டவர்கள் இவரது சக தொழிலாளர்கள் என்றே கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 4.40 மணியளவில் ஹாஃப் மூன் ஷெரிப் அலுவலகத்திற்கு முன்பு Zhao Chunli அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார்.

அவரது வாகனத்தில் இருந்து துப்பாகி ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், Zhao Chunli தனியொருவராக இந்த படுகொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்றே பொலிசார் நம்புகின்றனர்.

லூனார் புத்தாண்டு விழா

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் உள்ள மான்டேரி பார்க் பகுதியில் லூனார் புத்தாண்டு விழாவை கொண்டாடி வந்த மக்கள் மீது 72 வயதான Huu Can Tran கொலைவெறி தாக்குதலை முன்னெடுத்து, கொத்தால 11 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்குள் பண்னை தொழிலாளர்கள் 7 பேர்களை இன்னொரு சீனர் சுட்டுக்கொன்றுள்ளார்.

48 மணி நேரத்தில் அமெரிக்காவை உலுக்கிய இன்னொரு சம்பவம்... இருவேறு இடங்களில் கொத்தாக சடலங்கள் | Fatal Shooting Seven Chinese Farm Workers

@abc7

Zhao Chunli தற்போது பொலிஸ் விசாரணையில் இருப்பதாகவும், அவரது வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதம் கொலைக்கு பயன்படுத்தியதாக இருக்கலாம் எனவும், அவருக்கு குற்ற பின்னணி உள்ளதா என்பது தொடர்பிலும் விசாரிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.