பிரித்தானிய இளவரசி யூஜெனி மற்றும் கணவர் ஜாக் ப்ரூக்ஸ்பேங்க் தம்பதி இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள்.
இரண்டாவது குழந்தை
இளவரசி யூஜெனி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். யூஜெனி மற்றும் அவரது கணவர் ஜாக் ப்ரூக்ஸ்பேங்க் தம்பதி தங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்பதை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
32 வயதான யூஜெனி, சில மாதங்களில் தனது இரண்டாவது குழந்தையை வரவேற்பார் என்று எதிர்பார்க்கிறார்.
Getty Images
மகிழ்ச்சி செய்தி
டச்சஸ் ஆஃப் யார்க் என்ற பட்டத்துக்கு உரியவரும், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் சாராவின் மகளுமான யூஜெனி செவ்வாயன்று (ஜனவரி 24) இந்த இன்று மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.
அவரது இன்ஸ்டா பதிவில், “இந்த கோடையில் எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய சேர்க்கை இருக்கும் என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று தெரிவித்தார்.
இந்த பதிவுடன், இளவரசி யூஜெனியம் அவரது முதல் குழந்தை இளவரசி மற்றும் அவர்களது குழந்தை ஆகஸ்ட் (August Brooksbank) இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ம் இருந்தது. அவர்களின் முதல் குழந்தை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 9, 2021 அன்று பிறந்தது.
Instagram/Getty
பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், “இளவரசி யூஜெனி மற்றும் திரு ஜாக் ப்ரூக்ஸ்பேங்க் இந்த கோடையில் தங்களின் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். குடும்பம் மகிழ்ச்சியில் உள்ளது மற்றும் ஆகஸ்ட் ஒரு பெரிய சகோதரராக ஆவலுடன் காத்திருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டது.