சண்டிகர் சண்டிகரில், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து, போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சண்டிகரில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் பஸ் நிலையம் அருகே, மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, போலீசார் உடனடியாக நீதிமன்றத்துக்குச் சென்று, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் வெளியேற்றினர்.
பின், நீதிமன்ற வளாகம் முழுதும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினரால் தீவிரமாக சோதனையிடப்பட்டது. காவல் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
‘ஆனால், வெடிகுண்டும் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement