திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் காணிக்கை எண்ணும் பணி: முதன்முறையாக யூடியூப்பில் நேரலை!

புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது. முதல் முறையாக கோயிலின் யூடியூப் பக்கத்தில் காணிக்கைகள் எண்ணுவது நேரலையாக ஒளிபரப்பு ஆகிறது.

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தமிழக மட்டுமல்லாது, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோயிலின் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். தற்போது நடந்து முடிந்த வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சென்ற நிலையில் மாதாந்திர உண்டியல் மற்றும் வைகுண்ட ஏகாதசிக்கான சிறப்பு உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

image
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் திறக்கப்பட்டு திருச்சி மண்டல உதவி ஆணையர் லட்சுமணன் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது.

 முதல்முறையாக காணிக்கைகள் கணக்கிடப்படுவது Srirangam temple youtube-ல் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் காணிக்கைகள் முழுமையாக எண்ணப்பட்டு விவரங்கள் தெரிவிக்கப்படும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.