
வாய்ப்பு கிடைக்காததால் இளம் தெலுங்கு நடிகர் தற்கொலை
குண்டனப்பு பொம்மா, செகண்ட் ஹேண்ட் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா. அதன் பிறகு ஹீரோ வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். போதிய வாய்ப்பு கிடைக்காதால் மன அழுத்த்ததில் இருந்த அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் கொண்டாபூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உயர் சிகிச்சைக்காக உறவினர்கள் அவரை விசாகப்பட்டினத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தற்கொலை மரணம் தொடர்பான போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.