சென்னை அருகே உள்ள மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர்கள் சேதுமாதவன் – பிரியா தம்பதியினர். இவர் குழந்தை ஸ்ருதி. இவர் ஜியான் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ஆம் தேதி பள்ளி சென்று பின்னர் வீடு திரும்பும் வழியில் முடிச்சூர் சாலையில் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டையில் விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் பேருந்திற்கு தீ வைத்தனர். இந்த ச்சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று இந்த சம்பவத்தில் கைதான அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.