மிஸ்டர் கழுகு: ஆளுநருடன் பொன்முடி உணவருந்திய பின்னணி!

ஆளுநர் உரையுடன் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் தமிழ்நாடு சட்டசபையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, அரசு கொடுத்த உரையின் சில பகுதிகளை தவிர்த்துவிட்டு படித்ததால் ஏற்பட்ட பிரச்னை டெல்லி வரை எதிரொலித்தது.
அன்றைய தினம், ஆளுநர் அதிருப்தியுடன் அவையிலிருந்து வெளியேறியபோது, அவரைப் பார்த்து அமைச்சர் பொன்முடி, ‘போய்யா’ எனக் கைகாட்டியதாக சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 22-ம் தேதியன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33- வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி வெளியான புகைப்படத்தில் தமிழ்நாடு ஆளுநருடன், அமைச்சர்கள் பொன்முடி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஒன்றிய திறன் மேம்பாடு தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உணவு அருந்தும் காட்சி இடம் பெற்றிருந்தது.
இந்த படத்தை சமூக வலை தளங்களில் பதிவிட்ட பலர், ஆளுநர் அளித்த விருந்தில் பங்கேற்றதாக பொன்முடி மற்றும் திமுக-வை கிண்டலடித்து இருந்தனர்.
இந்த நிலையில், பல்கலைக்கழக விழாவையொட்டி ஆளுநருடன் அமைச்சர் பொன்முடி உணவருந்திய பின்னணி என்ன என்பதை இன்றைய ஜூனியர் விகடனில் மிஸ்டர் கழுகு தரும் எக்ஸ்க்ளூஸிவ் தகவலில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவதையொட்டி
தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் கத்திச் சண்டை
அழகிரிக்கு எதிராக டெல்லிக்குப் பறந்த ‘நோட்’
மற்றும் ஓ.பி.எஸ்-ஸின் குஜராத் பயணம் பற்றிய விசேஷத் தகவல்
உள்ளிட்ட மேலும் பல எக்ஸ்க்ளூஸிவ் தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து… ஏன்?

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்து, உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடை ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் உள்ளிட்ட விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
ஈரோடு இடைத்தேர்தல்: பாஜக-வுக்கு சிக்கல் ஏன்?

ஈரோடு இடைத்தேர்தலையொட்டி, ஜனவரி 21ஆம் தேதி இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆகிய இரு தரப்பினரும் பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து தங்களுக்கு ஆதரவு கேட்டனர்.
ஓ.பி.எஸ் தரப்பு பாஜக போட்டியிட்டால் ஆதரவு தருவதாகவும் சொல்லியது. ஆனால், பா.ஜ.க தரப்பிலோ யாரை ஆதரிப்பது என்கிற கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த பிரச்னையில் பாஜக-வுக்கு உள்ள சிக்கல் என்ன என்பது உள்ளிட்ட விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
ஈரோடு இடைத்தேர்தல்: ஆதரவை அறிவித்த கமல்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திருமகன் ஈ.வே.ரா, ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதன் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி 27-ல் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், இந்த தேர்தலில் தங்களது கட்சி ஆதரவு யாருக்கு என்பதை அறிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
இது குறித்த விரிவான செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
பணம் சம்பாதிக்க 10 கட்டளைகள்!

கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக டீமேட் கணக்குகள் கணக்கில்லாமல் உயர்ந்துள்ளன. பங்குச் சந்தையும் புதிய உச்சத்தைத் தொட்டது. இவை பல புது முதலீட்டாளர்களின் வருகையால் நடந்த சாதனையே.
இந்தப் புது முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ளவும், பழைய முதலீட் டாளர்கள் நினைவுகூரவும் நிதி ஆலோசகர் எம்.கண்ணன் (radhaconsultancy.blogspot.com) விவரிக்கும் 10 கட்டளைகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்…
பொம்மைகளில் மறைந்திருக்கும் ஆபத்து..!

‘ரசாயனம் கலந்த விளையாட்டுப் பொருள்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம்’ என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
இந்த நிலையில், ரசாயனம் கலந்த விளையாட்டுப் பொருள்கள் என்ன மாதிரியான பாதிப்புகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும், குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்?
விழுப்புரத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் பழனிராஜ் பகிரும் தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
கவுண்டமணி கம்பேக் … போனை போட்ட யோகிபாபு!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் கதாநாயகனாகக் களமிறங்குகிறார் காமெடி கிங் கவுண்டமணி.
‘பேய காணோம்’ படத்தின் இயக்குநரான செல்வ அன்பரசன் இயக்குகிறார். கவுண்டமணியின் 31 ஆண்டுகால நெருங்கிய நண்பரான மதுரை செல்வம் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
படத்தில் நடிப்பவர்கள் யார் யார்? கவுண்டமணிக்கு யோகிபாபு போன் செய்தது ஏன், எப்போது படப்பிடிப்பு என்பது குறித்து தயாரிப்பாளர், இயக்குநரிடம் விசாரித்ததில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…