தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம் உள்பட ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்தவகையில், நாளை நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிளப்புகளிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், குடிமகன்கள் அனைவரும் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அனைவரும் இன்றே மதுபாட்டில்களை வாங்கி வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் குடிமகன்களின் கூட்டம் அலை மோதுகிறது. தினமும் டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ரூ.130 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது. ஆனால், நாளை விடுமுறை என்பதால், இன்று வழக்கத்தைவிட மக்கள் கூட்டமும் மது விற்பனையும் அதிக அளவில் உள்ளது.