அல் இத்திஹாத் அணிக்கு எதிரான போட்டி குறித்து அல் நஸர் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ட்வீட் செய்துள்ளார்.
ரொனால்டோவை வாங்கிய அணி
போர்த்துக்கல் நட்சத்திரமான ரொனால்டோ அல் நஸர் எஃப் அணிக்கு மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார்.
ஆனால் முதல் போட்டியில் அவர் கோல் அடிக்காததால் சில எதிர்மறை விமர்சங்களை அவர் சந்தித்தார்.
இந்த நிலையில் அல் இத்திஹாத் அணியுடன் அல் நஸர் அணி இன்று மொத உள்ளது.
புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அல் இத்திஹாத் அணியுடன் முதல் இடத்தில் இருக்கும் அல் நஸர் அணி மோத உள்ளதால் ரசிகர்கள் இடையே இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
@ndout: Al Nassr FC via
ரொனால்டோவின் பதிவு
இதுகுறித்து அல் நஸர் அணியில் இணைந்துள்ள ரொனால்டோ தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாளை (இன்று) ஆட்டத்தை எதிர்நோக்குகிறோம்! அணியாக செல்வோம்’ என கூறியுள்ளார்.
Looking forward to the big game tomorrow!💪🏼
Let’s go team!💙💛 pic.twitter.com/T3EvOqcv64— Cristiano Ronaldo (@Cristiano) January 25, 2023
ரொனால்டோவின் பதிவிற்கு ஆதரவாக ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.