"இறங்கி அடிச்சு பாக்க தயாராகிட்டீங்க…" – வெளியானது தி லெஜெண்ட் OTT ரிலீஸ் அப்டேட்..!

தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரும், தொழிலதிபருமான சரவணன் அருள் நடித்து தயாரித்திருக்கும் தி லெஜெண்ட் படம் கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி தியேட்டரில் வெளியானது. ஆக்‌ஷன், காமெடி என பக்கா கமெர்சியல் படமாக உருவான இந்த படத்தில் நடிகர்கள் விவேக், பிரபு, சுமன், நாசர், யோகி பாபு, யாஷிகா ஆனந்த், ஊர்வசி ரவுடேலா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாக இருக்கும் டாக்டர் சரவணன் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடித்து அதை இந்தியாவுக்கான உடைமையாக்க போராடுவார். அந்த நாயகனாக தி லெஜெண்ட் படத்தில் சரவணன் அருள் நடித்திருக்கிறார்.

image

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்த தி லெஜெண்ட் படத்தை ஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியன் படமாக வெளியானது. தியேட்டரில் வந்த போது கலவையான விமர்சனங்களையே தி லெஜெண்ட் திரைப்படத்திற்கு கிடைத்திருந்தது.

இருப்பினும் ஆன்லைன் தளத்தில் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வியை தொடர்ந்து சினிமா ரசிகர்கள் எழுப்பி வந்தனர். பொதுவாக ஒரு படம் ரிலீசாகி 30 நாட்கள் ஆனப்பிறகு ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது வழக்கம். ஆனால் தி லெஜெண்ட் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 6 மாதங்களான நிலையில் இப்போது வரை ஓ.டி.டியில் வெளியிடுவது குறித்த எந்த அறிவிப்பும் வெளிவராமலேயே இருந்தது.

image

இந்த நிலையில் தி லெஜெண்ட் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்து லெஜெண்ட் சரவணனே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அதிலும், “அன்பானவர்களே நீங்கள் கேட்டது நடக்கும்.. வெகு விரைவில்” எனக் குறிப்பிட்டு படத்தின் ஒரு காட்சியையும் பகிர்ந்திருக்கிறார்.

இருப்பினும் எந்த ஓ.டி.டி தளத்தில் எப்போது வெளியாகிறது என்ற தகவல் எதுவும் இல்லை. முன்னதாக தி லெஜெண்ட் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகும் என்றும் தகவல்கள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ”மக்கள் கூப்பிட்டால் வருவேன்” – லெஜெண்ட் சரவணா கூறிய அதிரடி பதில்.. எதற்கு தெரியுமா? 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.