திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்படுகிறது. பழனி நகராட்சி மூலம் செயல்பட்டு வரும் ஆட்டிறைச்சி கூடமும் நாளை செயல்படாது என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பழனி நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
