உக்ரைனுக்கு மறைமுக ஆதரவு… சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் எடுத்துள்ள முடிவு


ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவு பெருகிவருகிறது எனலாம். காரணம், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கத் தயக்கம் காட்டிய ஜேர்மனி முதலான நாடுகள் தற்போது ஆயுதங்கள் வழங்கத் திட்டமிட்டுவருகின்றன.

சுவிஸ் நாடாளுமன்றம் எடுத்துள்ள முடிவு

நடுநிலை வகிக்கும் நாடான சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்றம், தற்போது உக்ரைன் போருக்கு மறைமுக ஆதரவைத் தெரிவிப்பதுபோல் ஒரு முடிவை எடுத்துள்ளது.

அதாவது, சுவிட்சர்லாந்து நாட்டின் விதிகளின்படி, சுவிஸ் தயாரிப்பான ஆயுதங்களை வாங்கும் நாடுகள், அவற்றை வேறொரு நாட்டுக்கு விற்கவோ இலவசமாக கொடுக்கவோ கூடாது.

உக்ரைனுக்கு மறைமுக ஆதரவு... சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் எடுத்துள்ள முடிவு | Parliament Says Its Ok To Send Arms To Ukraine

image – Pixabay 

ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு பங்களிப்பைச் செய்ய முடிவு

தற்போது ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு தனது பங்களிப்பைச் செய்ய முடிவு செய்துள்ளது சுவிட்சர்லாந்து.

ஆகவே, தனது விதிகளில் ஒரு முக்கிய மாற்றத்தை அனுமதிக்க சுவிஸ் நாடாளுமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. அதன்படி, சுவிஸ் ஆயுதங்களை வாங்கிய நாடுகள் இனி அவற்றை உக்ரைன் போன்ற நாடுகளுக்குக் கொடுக்கலாம்.

சுவிட்சர்லாந்து நேரடியாக ஆயுதங்களை வழங்காமல், வேறொரு நாடு அவற்றை தான் விரும்பும் நாட்டுக்கு கொடுப்பதால் தங்கள் நாடு நடுநிலைமை தவறவில்லை என சுவிஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் பாதுகாப்புக் கொள்கை கமிட்டி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.