2022 ஐசிசி விருதுகள் அறிவிப்பு! சிறந்த வீரர் யார்? இலங்கை வீரர் பிடித்த இடம்


2022ஆம் ஆண்டுக்கான சிறந்த நடுவர் விருதினை இங்கிலாந்தின் ரிச்சர்டு இல்லிங்வொர்த் வென்றார்.


ஐசிசி விருதுகள்

ஐசிசி 2022ஆம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. இதில் சிறந்த அணி, சிறந்த கேப்டன், சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஆடவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர்களும், மகளிர் கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனைகளும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட்டர் விருதை சூர்யகுமார் யாதவ் (இந்தியா) வென்றுள்ளார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நமீபியா அணி வீரர் ஜெர்ஹார்ட் எராஸ்மாஸ் ‘Men’s Associate Cricketer of The Year’ விருதை வென்றார்.

2022 ஐசிசி விருதுகள் அறிவிப்பு! சிறந்த வீரர் யார்? இலங்கை வீரர் பிடித்த இடம் | Icc Announce 2022 Cricket Awards

Emerging Cricketer விருதை தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜென்சன் பெறுகிறார்.

சிறந்த நடுவர் விருதினை இங்கிலாந்தின் ரிச்சர்டு இல்லிங்வொர்த் வென்றுள்ளார். இது அவர் இரண்டாவது முறையாக வெல்லும் விருது ஆகும்.

2022 ஐசிசி விருதுகள் அறிவிப்பு! சிறந்த வீரர் யார்? இலங்கை வீரர் பிடித்த இடம் | Icc Announce 2022 Cricket Awards

2022 ஐசிசி விருதுகள் அறிவிப்பு! சிறந்த வீரர் யார்? இலங்கை வீரர் பிடித்த இடம் | Icc Announce 2022 Cricket Awards

சிறந்த ஐசிசியின் அணிகள்

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை சிறந்த அணி ஒன்றை ஐசிசி அறிவித்துள்ளது. அதன் கேப்டனாக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ், ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும், அவுஸ்திரேலியாவின் கவாஜா, லபுசாக்ஃனே, கம்மின்ஸ், லயோன் ஆகியோரும், இந்திய வீரர் ரிஷாப் பண்ட், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், மேற்கிந்திய தீவுகளின் பிராத்வெயிட், தென் ஆப்பிரிக்காவின் ரபாடா ஆகியோர் டெஸ்ட் அணியின் சிறந்த வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டி20 கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவரது டி20 அணியில் முகமது ரிஸ்வான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், க்ளென் பிலிப்ஸ், சிக்கந்தர் ரஸா, ஹர்திக் பாண்ட்யா, சாம் கரன், வணிந்து ஹசரங்கா, ஹரிஸ் ராஃப் மற்றும் ஜோஸ் லிட்டில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வணிந்து ஹசரங்கா/Wanindu Hasaranga

@icc-cricket

ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக பாகிஸ்தானின் பாபர் அசாம் தெரிவாகியுள்ளார்.

அவரது அணியில் டிராவிஸ் ஹெட், ஷாய் ஹோப், ஷ்ரேயாஸ் ஐயர், டாம் லாதம், சிக்கந்தர் ரஸா, மெஹிதி ஹசன் மிராஸ், அல்சாரி ஜோசப், முகமது சிராஜ், டிரெண்ட் போல்ட், ஆடம் ஜம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.