அமெரிக்காவில் கொரோனா தாக்கிய முதல் ஆண்டில் இதய நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டில் இதய நோயினால் 8 இலட்சத்து 74 ஆயிரத்து 613 பேர் இறந்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டு இதய நோய்க்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 28 ஆயிரத்து 741 ஆக அதிகரித்துள்ளது. இது 6.2 சதவீத அதிகரிப்பாகும்.
இதற்கமைய, 2020 ஆம் ஆண்டு உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தவர்கள் கொரோனா தொற்று பாதிப்பின் பின்னர் சிறிது காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.