மகன் இறந்துவிட்டதால்…28 வயது மருமகளை திருமணம் செய்த 70 வயது முதியவர்!


உத்தரபிரதேச மாநிலத்தில் மகன் உயிரிழந்துவிட்டதை அடுத்து கைலாஷ் யாதவ் என்ற 70 வயது முதியவர், 28 வயதுடைய மருமகளை திருமணம் செய்து கொண்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருமகளை திருமணம் செய்த முதியவர்

உத்தரபிரதேச மாநிலம் சாபியா உமாரோ கிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர் கைலாஷ் யாதவ், இவருக்கு நான்கு மகன்கள் உள்ள நிலையில், இவரது மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அவரது மூன்றாவது மகனும் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கைலாஷ் தனது 28 வயதுடைய விதவை மருமகள் பூஜாவை மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.

மகன் இறந்துவிட்டதால்…28 வயது மருமகளை திருமணம் செய்த 70 வயது முதியவர்! | Chhapia Man 70 Marries 28 Year Old Daughter In Law

சமீபத்தில் கோவிலில் வைத்து மருமகள் பூஜாவை கைலாஷ் திருமணம் செய்துக் கொண்டு இருந்த நிலையில், இந்த திருமணம் தொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பொலிஸார் விசாரணை

பர்ஹல்கஞ்ச் காவல் நிலையத்தில் சௌகிதாராக பணிபுரியும் கைலாஷ் யாதவ் மருமகளை திருமணம் செய்து கொண்டது தொடர்பான தகவல்கள் வெளியாகி அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகன் இறந்துவிட்டதால்…28 வயது மருமகளை திருமணம் செய்த 70 வயது முதியவர்! | Chhapia Man 70 Marries 28 Year Old Daughter In Law

கைலாஷ், அக்கம்பக்கத்திலோ அல்லது கிராமத்திலோ யாருக்கும் தெரிவிக்காமல் அமைதியாக பூஜாவை திருமணம் செய்து கொண்டார், புகைப்படம் வைரலான பிறகுதான் மக்களுக்கு இது தெரிய வந்தது.

இதனால் பர்ஹல்கஞ்ச் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜே.என்.சுக்லா இந்த திருமணம் குறித்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.