பிரித்தானிய பிரதமரின் விருதை வென்ற இந்திய வம்சாவளி பொறியாளர்!


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர், குறைந்த விலை கண்டுபிடிப்புக்கான இங்கிலாந்து பிரதமரின் விருதை வென்றார்.

இந்திய வம்சாவளி சீக்கியருக்கு பிரதமர் விருது

எளிய மக்களுக்காக கைகளால் இயக்கப்படும் சலவை இயந்திரத்தாய் கண்டுபிடித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய-சீக்கிய பொறியாளர் பிரதமர் ரிஷி சுனக்கின் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் (Points of Light) விருதை வென்றுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது வாஷிங் மெஷின் திட்டத்தை நிறுவிய நவ்ஜோத் சாவ்னி (Navjot Sawhney), மின்சாரம் இல்லாத பகுதிகளில் கைகளால் இயக்கக்கூடிய இயந்திர கண்டுபிடிப்பிற்காக கௌரவிக்கப்பட்டார்.

பிரித்தானிய பிரதமரின் விருதை வென்ற இந்திய வம்சாவளி பொறியாளர்! | Indian Origin Engineer Win Uk Pm Award Rishi SunakPC: pointsoflight.gov.uk

ரிஷி சுனக் பாராட்டு

இந்த விருதை வென்றதும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுணக்கிடமிருந்து பாராட்டை பெற்றதும் ஒரு கனவு போல் இருந்ததாக சாவ்னி விவரித்தார்.

பிரதமர் ரிஷி சுனக், சாவ்னிக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தில், “உலகெங்கிலும் மின்சார வாஷிங் மெஷின்களை அணுகாத ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவ நீங்கள் ஒரு பொறியியலாளராக உங்கள் தொழில்முறை திறன்களைப் பயன்படுத்தியுள்ளீர்கள்” என்று எழுதினார்.

“உங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்போது மனிதாபிமான உதவி மையங்களில் வசிக்கும் உக்ரேனிய குடும்பங்களுக்கும் உங்கள் இயந்திரங்கள் உதவுகின்றன என்பதை நான் அறிவேன். உங்கள் புத்திசாலித்தனம், இரக்கம் மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை எங்கள் அனைவருக்கும் உத்வேகம்,” என்று பிரதமர் அதில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பிரதமரின் விருதை வென்ற இந்திய வம்சாவளி பொறியாளர்! | Indian Origin Engineer Win Uk Pm Award Rishi SunakPhoto: Instagram

Points of Light விருது

Points of Light சிறந்த தனிப்பட்ட தன்னார்வத் தொண்டர்களும் மற்றும் தங்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படும் நபர்களும், அவர்களின் உத்வேகமான பணியை அங்கீகரிப்பதற்காக பிரித்தானிய பிரதமரால் தொடர்ந்து கௌரவிக்கப்படுகிறார்கள். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.