விக்கெட் இழப்பின்றி 146 ஓட்டங்கள்..தென் ஆப்பிரிக்காவின் அசுர வேகப்பந்து வீச்சில் வீழ்ந்த இங்கிலாந்து


இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

வான் டெர் டுசென் சதம்

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி Mangaung Oval மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 298 ஓட்டங்கள் குவித்தது.

வான் டெர் டுசென் 111 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 53 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சாம் கரண் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், டேவிட் மாலன் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 19.3 ஓவரில் 146 ஓட்டங்கள் குவித்தது.

மாலன் 59 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தின் சரிவு ஆரம்பமானது.

டக்கெட்(3), புரூக்(0) ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் பட்லர் சிறிது நேரம் போராடினார்.

இதற்கிடையில் ராய் 11வது ஒருநாள் சதத்தை எட்டினார். இதன்மூலம் அவர் 4000 ஓட்டங்களை கடந்தார்.

அணியின் ஸ்கோர் 196 ஆக இருந்தபோது ராய் 113 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் நோர்ட்ஜெ, ரபடா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தென் ஆப்பிரிக்கா வெற்றி

பட்லர் 36 ஓட்டங்களில் அவுட் ஆனார். இறுதியில் 44.2 ஓவரில் இங்கிலாந்து 271 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தென் ஆப்பிரிக்க அணியின் தரப்பில் நோர்ட்ஜெ 4 விக்கெட்டுகளையும், மகளா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் விருதை சிசன்டா மகளா வென்றார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி 29ஆம் திகதி நடைபெற உள்ளது. 

விக்கெட் இழப்பின்றி 146 ஓட்டங்கள்..தென் ஆப்பிரிக்காவின் அசுர வேகப்பந்து வீச்சில் வீழ்ந்த இங்கிலாந்து | Sa Beat Eng By 27 Runs In First Odi   

@Twitter

விக்கெட் இழப்பின்றி 146 ஓட்டங்கள்..தென் ஆப்பிரிக்காவின் அசுர வேகப்பந்து வீச்சில் வீழ்ந்த இங்கிலாந்து | Sa Beat Eng By 27 Runs In First Odi

@Twitter



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.