செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்த ரன்பீர் கபூர்

சமீப நாட்களாக ரசிகர்கள் தங்களது அபிமான நடிகர்களுடன் செல்பி எடுப்பதற்காக அவர்களின் அனுமதியின்றி அத்துமீறும் நிகழ்வுகளும் அதற்கு சில நேரங்களில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் கடுமையாக எதிர்வினையாற்றுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிவகுமார் தன் அனுமதியின்றி தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட நிகழ்வு மிகப்பெரிய பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தன்னுடன் செல்பி எடுக்க முயற்சித்த இளைஞரின் செல்போனை பறித்து தூக்கி வீசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு இளைஞர் நடந்துவரும் ரன்வீர் கபூருடன் செல்பி எடுக்க முயற்சிக்கிறார். அதற்கு ரன்பீர் கபூரும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுக்கிறார். அதே சமயம் செல்பி எடுக்க அந்த இளைஞர் தடுமாறுவதால் ஏற்படும் தாமதம் காரணமாக அருகில் இருந்தோர் அவரை விலகி நிற்கும்படி சத்தம் போடுகின்றனர்.. அமைதியாக அந்த நபரிடம் செல்போனை ரன்பீர் கபூர் கேட்க அந்த இளைஞனும் கொடுக்கிறார். ஒருவேளை அந்த இளைஞனுடன் செல்பி எடுக்க அவரே உதவி செய்கிறாரோ என நினைத்தால் படக்கென செல்போனை பின்பக்கமாக தூக்கி எறிகிறார்.

இந்த வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் ரன்பீர் கபூரின் இந்த செயலை கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலரோ இது ஒரு பிராங்க் வீடியோ என்று ரன்பீர் கபூருக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றனர். அதேசமயம் எப்போதுமே ரன்பீர் கபூர் பொதுவெளியில் வரும்போது தன்னை போட்டோ எடுக்கும் புகைப்படக் கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் ரொம்பவே கூலாகவே டீல் பண்ணுவார் என்பதால் இந்த வீடியோ அவர் நடித்துவரும் விளம்பர படத்திற்கான புரமோஷனுக்காக எடுக்கப்பட்டதாக கூட இருக்கலாம் என்றும் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.