கோர்ட் விசாரணைக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த வழக்கறிஞரை கண்டித்த நீதிபதி| The lawyer who wore jeans to the court hearing: The judge threatened to expel him

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கவுஹாத்தி: அசாம் ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையின் போது ஜூன்ஸ் பேன்ட் அணிந்து வந்த வழக்கறிஞரை அறையிலிருந்து வெளியேற்றுமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்ட சம்பவம் நடந்தது.

அசாம் மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று ஜாமின் வழக்கு ஒன்றில் ஆஜராக பி.கே. மஹாஜன் என்ற வழக்கறிஞர் வந்தார். அப்போது வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த நீதிபதி கல்யாண் சுரானா , அந்த வழக்கறிஞர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருப்பதை கவனித்தார்.

latest tamil news

உடனே போலீசாரை அழைத்து அந்த வழக்கறிஞரை உடனே கோர்ட் அறையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டதுடன் விதி மீறிய வழக்கறிஞர் மஹாஜன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பார் கவுன்சிலுக்கு கடிதம் எழுதினார்.

விசாரணை நடத்த வேண்டிய அனைத்து வழக்குகளையும் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார். ஜீன்ஸ் அணிந்து வந்த வழக்கறிஞரால், ஜாமின் எடுப்பதற்காக கொடுக்கப்பட்ட வேறு சில மனுக்கள் ஒரு வாரம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.